சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் பூஜையுடன் துவங்கப்பட்டது…

இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார் இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு நன்றி சொல்லி, பருந்தாகிறது ஊர் குருவி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
நாயகியாக புதுமுகம் ராஷ் (Razz) நடிக்கிறார், இந்த நாயகி ராஷ் youtube -ல் அனைவராலும் புனிதம் கேர்ள் என்று அழைக்கப்படுபவர் ஆவார், இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்…

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட் ரொமாரிக் (jude Romaric). இப்படத்திற்கு இணை தயாரிப்பு தனபால் கணேஷ், ஒளிப்பதிவு லோகநாத் சஞ்சய், இசை ஜேடி, படத்தொகுப்பு தியாகு.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இப்படத்தின் கதை பற்றிய இயக்குனர் கூறுகையில் இது ஒரு ஆக்ஷன் திரில்லர் வகையைச் சார்ந்த படம்

இப்படத்தின் மையக்கதை என்னவென்றால் ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம் , விழிப்புணர்வு பெறுதல் , அறிதல், புரிந்து கொள்ளுதல் ஆகிய மூன்றையும் திரைக்கதையாக கொண்டு இப்படம் இருக்கும் என கூறினார்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதிங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’
அடுத்த கட்டுரைகவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது