ராங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

ராங்கி கதை

கதையின் நாயகி த்ரிஷா ஒரு கம்பிரமான பத்திரிகையாளராக இருக்கிறார், த்ரிஷாவின் அண்ணன் மகளின் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி ஒருவர் மிரட்டுகிறார், இதனை அவர் த்ரிஷாவிடம் கூறுகிறார், அதன் பிறகு த்ரிஷா அதைப்பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கினறன.

பிறகு த்ரிஷா அவரது அண்ணன் மகளின் முகநூல் பக்கத்தில் தவறாக பேசும் அனைவரையும் எச்சரிக்கிறார், ஆனால் அதில் ஒரு நபர் மட்டும் த்ரிஷாவிடம் சிக்கவில்லை, மற்றும் அந்த நபர் தீவிரவாதி கூட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது, தொடர்ந்து த்ரிஷா அவரின் அண்ணன் மகள் போலவே அந்த தீவிரவாதியிடம் பேசுகிறார், கடைசியில் இவர் இப்படி பேசுவது அவரின் அண்ணன் மகளுக்கு வினையாக வந்து ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார், அதிலிருந்து அவரை த்ரிஷா காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதும் இதன் பின்னணினியில் இருக்கும் உலக அரசியல் என்ன என்பதே படத்தின் மீதி கதை.

இதனை இயக்குனர் AR .முருகதாஸின் கதையில், இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
வசனம்
த்ரிஷாவின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற இரண்டாம் பாதி கதைக்களம்

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *