ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெபெல் கதை

இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு KSQ மற்றும் SFY என இரண்டு குழுவினர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மாணவர்களை அசிங்கப்படுத்துகின்றனர். மற்றும் தேவையில்லாமல் வம்பிழுக்கின்றனர்.

கல்லூரிக்கு வந்த முதல்நாளே கதையின் நாயகன் கதிரை அசிங்கப்படுத்துகின்றனர். கல்லூரியில் ஓணம் விழாவின் போது ஒரு பிரச்சனை நடக்கிறது, அது பெரிய பிரச்னையாகவும் மாறுகிறது. இந்த பிரச்னைக்கெல்லாம் தீர்வு காண, கல்லூரியில் நடக்கும் தேர்தலில் கதிர் TSP என புதிய அணியை உருவாக்குகிறார். இதனால் இவர்களுக்குள் நடந்த பிரச்னை என்னென்ன என்பதும் கடைசியில் நாயகன் கதிர் தான் நினைத்ததை முடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் நிகேஷ் R.S இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡GV. பிரகாஷின் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡விறுவிறுப்பான முதல்பாதி கதைக்களம்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா!!!
அடுத்த கட்டுரைபிரைம் வீடியோ கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது