ரிங் ரிங் கதை
கதையின் ஆரம்பத்தில் புதுச்சேரியில் இருந்து தியாகுவும், அவரின் மனைவியும் சென்னைக்கு கிளம்பி வருகின்றனர், தியாகுவின் நண்பனான சிவாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு. இவர்களை தவிர சிவாவின் நண்பர்களான கதிரும், சுந்தரும் வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நெருங்கிய நண்பர்கள்.
Read Also: Kudumbasthan Tamil Movie Review
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்ததும் சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அனைவரும் சாப்பிடும்போது, விளையாட்டாக பேசிய விஷயம், சற்று சீரியசாக மாற ஆரம்பிக்கிறது. கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவும் மறையும் இல்லை என்பதை நிரூபிக்க, அனைவரின் செல்போனுக்கு வரும் போனையும், மெசேஜையும் அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதுதான் அந்த விளையாட்டு, இந்த விளையாட்டு கடைசியில் எப்படி முடிந்தது என்பதும், இந்த விளையாட்டால் இவர்களுக்குள் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சக்திவேல் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிரிக்கவைக்கும் ஒருசில எதார்த்த காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: ( 2.75 / 5 )