ராபர் கதை
கதையின் ஆரம்பத்தில் சென்ட்ராயன் மத்திய சிறையில் இருக்கிறார். அப்போது அவருடைய அறையில் ஆன்லைனில் பணமோசடி செய்த இரண்டு IT ஊழியர்கள் வருகிறார்கள், அவர்கள் தாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என்று புலம்பிக்கொண்டிருக்கும்ப்போது, சென்ட்ராயன் அவர்களிடம் உங்களை விட பெரிய தவறு செய்தவனை பற்றி சொல்கிறேன் என்று சத்யாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.
Read Also: Dexter Tamil Movie Review
சத்யா கிராமத்தில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். சென்னைக்கு வந்து IT கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுக்கு பெண்கள் மேல் மோகம் வருகிறது, அப்போது ஒரு பெண்ணுடன் பழகும்போது, அந்த பெண் டைமண்ட் நெக்லஸ் கேட்க அந்த பெண்ணுக்காக வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறான். இவன் இப்படி செய்யும்போது வினிதா என்ற பெண் இறந்துபோக அந்த பெண்ணின் அப்பா, சத்யாவை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார், இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணா எழுத அறிமுக இயக்குனர் SM பாண்டி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் சிறப்பான நடிப்பு
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
➡பிண்ணனி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.75 / 5 )