ராக்கெட் ட்ரைவர் கதை
2023 – கதையின் நாயகன் பிரபா ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவருக்கு தன்னை சுற்றியுள்ளவர்கள் தவறு செய்தால் பிடிக்காது, அதனை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார். அப்போது ஒரு சிறுவன் சவாரிக்கு வருகிறான், காசு இல்லாமலே அந்த சிறுவனுக்கு உதவி செய்கிறார் பிரபா.
அந்த பையனை பற்றி கேட்கும்போது, அவன் ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருப்பதாகவும். அவன் 1948 – லிருந்து வருவதாகவும், பெயர் APJ அப்துல்கலாம் எனவும் கூறுகிறான், ஆரம்பித்தில் பயந்த பிரபா ஒருகட்டத்தில் நம்புகிறான், கலாமிற்கு உதவி செய்ய தொடங்குகிறான்.
அப்துல் கலாம் 1948 – லிருந்து, 2023 வந்த காரணத்தையும், அதற்கான தீர்வை இருவரும் தேட ஆரம்பிக்கிறார்கள், இதற்கடுத்து என்னானது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த ஷங்கர் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிரிக்கவைத்த சில எதார்த்த காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங் : (3 / 5)