சபா நாயகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சபா நாயகன் கதை

2016 New Year அன்று போலீஸ் ரோந்து பணியில் இருக்கின்றனர். அப்போது கதையின் நாயகன் சபா ( அசோக் செல்வன் ) தனது நண்பர்களுடன் ரோட்டில் சரக்கு அடித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், அந்தநேரம் பார்த்து போலீஸ் சபாவை பிடித்துவிடுகின்றனர், மற்றும் இதேபோல் ரோட்டில் யாரெல்லாம் சுற்றுகிறார்களோ அனைவரையும் பிடிக்கின்றனர். அதில் ஒருவன் கையில் பீரோடு இருக்கிறான், போலீஸ் அவனை விசாரிக்கும்போது, தன் காதல் பிரேக் அப் ஆனதை சொல்கிறான், அந்த கதையினை கேட்டு போலீஸ் அவனை விட்டுவிடுகின்றனர்.

Read Also: Aayiram Porkaasukal Tamil Movie Review

அப்போது சபா, போலீசிடம் என்னுடைய காதலை பற்றி சொல்கிறேன், அதனை கேட்டுவிட்டு என்னை விடலாமா? வேண்டாமா? அல்லது என்ன செய்யலாம் என்று நீங்களே முடிவெடுங்கள் என்று சொல்லி தன் பள்ளி காதலை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான். பிறகு கல்லூரி காதலையும், அந்த காதல் ப்ரேக் அப் ஆனதையும் சொல்கிறான். இப்படி தன் காதல் கதையும், அந்த காதல் பிரேக் ஆனதையும் சொல்கிறான், கடைசியில் சபாவிற்கு யார் உண்மையான காதலியாக இருந்தார் என்பதும், சபா எதற்காக அன்றிரவு சரக்கடித்துக்கொண்டிருந்தார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் C.S கார்த்திகேயன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சபாவாக வாழ்ந்த அசோக் செல்வன்
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡க்ளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் நீளம்
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி கதைக்களம்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆயிரம் பொற்காசுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைNominees For Favorite Movie 2023