தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைவு, ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா ரஞ்சித் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள காளி வெங்கட் இன்று தனது டப்பிங் பணியை முடித்து உள்ளார். இதனை அடுத்து தனது டுவிட்டரில் ’நிறைவு, ஆழமான ,தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா.ரஞ்சித்’ என தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் செய்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





























