மாபெரும் வெற்றி பெற்ற #சர்தார் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்கது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகுறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்
அடுத்த கட்டுரைநித்தம் ஒரு வானம் தமிழ் திரைப்பட விமர்சனம்