‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது….

Read More

கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ….

Read More

சிவாஜிகணேசன் இடத்தில் கமல்ஹாசன்: ’இராமானுஜர்’ பட விழாவில் ராதாரவி பேச்சு

HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா…

Read More

மய்யமும் நீலமும் ஒன்றுதான் – பத்மஸ்ரீ கமல்ஹாசன்

இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார் பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், உயிரே உறவே தமிழே.. இந்த வாக்கியத்தை…

Read More

தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை…

Read More

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு

“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது- இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்…

Read More

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளனர்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி கோரிக்கை வைத்தனர்.அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Read More

கமல்ஹாசன் தலைமையில் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் !!

தமிழ் திரையுலகில் முன்னணி படலாசிரியரில் ஒருவரான ஸ்நேஹன் கன்னிகா என்ற நடிகையை திருமண செய்துகொள்ள இருக்கிறார். இது குறித்த அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. சினேகனும் கன்னிகவும் புது தம்பதியர்க்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இவர்களுடைய திருமணம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்க பட்டுள்ளது. இந்த திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான உலகநாயகன் டாக்டர் கமலஹாசன் அவர்களது தலைமையில் நடைபெற இருக்கிறது. கொரோன…

Read More

சில நேரங்களில் சில மனிதர்கள் – தலைப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாசர் மகன் அபிஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில்…

Read More

கமல்ஹாசன் கட்சி குறித்து கௌதமி கருத்து ?

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக நான் பாஜகவை கவனித்து…

Read More