கமல்ஹாசன் தலைமையில் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் !!

தமிழ் திரையுலகில் முன்னணி படலாசிரியரில் ஒருவரான ஸ்நேஹன் கன்னிகா என்ற நடிகையை திருமண செய்துகொள்ள இருக்கிறார். இது குறித்த அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. சினேகனும் கன்னிகவும் புது தம்பதியர்க்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

இவர்களுடைய திருமணம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்க பட்டுள்ளது. இந்த திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான உலகநாயகன் டாக்டர் கமலஹாசன் அவர்களது தலைமையில் நடைபெற இருக்கிறது.

கொரோன காலா கட்டம் என்பதால் பத்திரிகை நண்பர்களையும், ரசிகர்களையும் நேரில் அழைக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் சினேகன். மேலும் அவர் குறியதை கீழே படிக்கவும்.

நட்புக்குரிய
பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ் நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது

எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

எங்கள் திருமணம் விழா நடந்து முடிந்த 1 மணி நேரத்தில் நிழல்படங்களும் , வீடியோக்களும் உங்களை தேடி வந்து சேரும்.

எப்போதும் போல உங்கள் நட்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

உங்கள்
வாழ்த்துக்களையும்
ஆதரவையும்
எதிர்ப்பார்க்கும்.

உங்கள்
கவிஞர் சினேகன்’

நன்றி

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here