செம்பி கதை
கொடைக்கானலில் புலியூர் என்ற கிராமத்தில் பாட்டி கோவைசரளாவும் , பேத்தி செம்பியும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். தேன் மற்றும் காடை முட்டைகளை எடுத்து சந்தையில் விற்று, அதில் வரும் பணத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி ஒருநாள் செம்பி தேனை எடுத்துக்கொண்டு சந்தைக்கு போகும் வழியில், செம்பியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். பின்னர் கோவைசரளா போலீசை நம்பி இருக்கும் சமயத்தில், இவர்களுக்கு எதிராக போலீசும் திரும்பிவிடுகின்றனர். பிறகு தன் பேத்தியின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை கோவைசரளா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் அவர்களுக்கு செம்பிக்கு நீதி கிடைத்ததா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கே உண்டான பாணியில், மிகவும் எதார்தமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
Rating: ( 3.75/5 )


























