தாய் தந்தை இல்லாத பேரனை வளர்க்க தாத்தா படும் பாடும் அவனை நன்றாக படிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சியே இந்த சேத்துமான்
பேரனின் தாய் தந்தையை மேல் ஜாதியினர் ஒரு சாதாரண காரணத்திற்காக கொன்று விடுகிறார்கள் பிறகு அந்த பேரனை தாத்தா தான் பார்த்துக்கொள்கிறார் வருமானத்திற்காக மூங்கில் கூடைகளை செய்து விற்றுக்கொண்டும் அங்கு உள்ள ஒரு பண்ணையாரிடம் கைகட்டி வேலைசெய்துகொண்டும் இருக்கிறார் , அவர் எவ்வளவுதான் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்தாலும் அவரின் பேரனை நல்லபடியாக வளர்க்க விரும்புகிறார் அப்படி அவனை வளர்க்க வேண்டும் என்றால் கல்வி மட்டும் தான் அவனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மற்றும் அவனை தலை நிமிர செய்யும் என்பதை அந்த பேரனுக்கு சொல்லி கொடுத்து வளர்க்கிறார் ….

தாத்தா வேலை செய்துகொண்டிருக்கும் அந்த பண்ணையாருக்கு ஒரு நாள் பன்றிக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது அப்படி அந்த ஆசை எவ்வளவு பெரிய விபரீதத்தில் போய் முடிகிறது என்பது தான் மீதி கதையாக உள்ளது… இந்த கதை பெருமாள் முருகன் எழுதிய ஜாதி பற்றி சொல்லக்கூடிய வறுகறி என்ற சிறு கதையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் இந்த சேத்துமான்
படத்தில் சிறப்பானவை
*எதார்த்த திரைக்கதை
*தாத்தா பேரனின் நடிப்பு
*ஒளிப்பதிவு
*பின்னணி இசை
படத்தில் சீரானவை
*படத்தின் நீளம்
நடிகர்கள் & குழுவினர் மாணிக்கம், மாஸ்டர்.அஷ்வின், சுருளி, பிரசன்னா, குமார், சாவித்திரி, கன்னிகா, அண்ணாமலை, நாகேந்திரன், குரு திரைக்கதை, இயக்கம்: தமிழ் தயாரிப்பாளர்: பா.ரஞ்சித் கதை, வசனம்: பெருமாள் முருகன் ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா இசை: பிந்து மாலினி எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார்