சாகுந்தலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சாகுந்தலம் கதை

விஸ்வமித்ரன் மற்றும் மேனகைக்கு பிறந்த குழந்தையான சகுந்தலாவை மேனகை ஒரு ஆசிரமத்தில் விட்டுவிட்டு செல்கிறார். ஆசிரமத்தில் வாழ்ந்துவரும் சகுந்தலா மீது நாட்டின் ராஜாவான துஷ்யந்தாவிற்கு காதல் ஏற்படுகிறது, அடிக்கடி ரகசியமாக ராஜாவும் சகுந்தலாவும் சந்திக்கின்றனர், பிறகு இருவரும் சகசியமாக திருமணம் செய்துகொள்கின்றனர் ,பிறகு சகுந்தலாவும் கர்பம் ஆகிறாள் அப்போது ராஜா சகுந்தலாவை சீக்கிரம் அரண்மனைக்குள் அழைத்துச்செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார்.

Read Also : Rudhran Movie Review

இதற்கிடையில் துருவாசா மகரிஷி என்ற முனிவர் சகுந்தலாவிற்கு மிகப்பெரிய சாபத்தை கொடுக்கிறார். மற்றும் தன்னை மதிக்காததற்காக ராஜாவிற்கு சகுந்தலா பற்றிய நியாபகம் இல்லாமல் செய்துவிடுகிறார். கடைசியில் சகுந்தலா பற்றிய நியாபகம் ராஜாவிற்கு வந்ததா ? இல்லையா ? என்பதும் சகுந்தலா துஷ்யந்தா ராஜாவை சேர்ந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
சகுந்தலாவாகவே வாழ்ந்த சமந்தா
மணிஷர்மாவின் இசை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான 3டி தொழில்நுட்பம்
தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்

Rating : ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *