உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

ஷாருக்கான் தனது நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் பயணிக்கிறார். அத்துடன் அவரது நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரையுலகில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கி பயணிக்கிறது. ஷாருக்கானின் ‘ஜவான்’ இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் பிரவேசித்திருக்கிறது. அத்துடன் உலகளவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதற்கு உத்வேகத்துடன் பயணிக்கிறது.

‘ஜவான்’ வெற்றியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த திரைப்படம் தென்னிந்திய திரையுலக சந்தையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றதாகும். இந்தத் திரைப்படம்150 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புத்தகத்தில் புதிய பக்கங்களை எழுதி, தென்னிந்திய திரையுலக சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வெற்றியானது இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும்.. உலகெங்கிலும் உள்ள சாதனைகளை முறியடிக்கும் பாதையையும் உருவாக்கியுள்ளது. உலக பாக்ஸ் ஆபீசில் 907 கோடியே 54 லட்சம் ரூபாயை வசூலித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்து, ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது.

‘ஜவான்’ தனது வெற்றிப் பயணத்தை தொடர்வதால்… பாக்ஸ் ஆபிஸில் அழிக்க இயலாத அடையாளத்தை பதிவு செய்து வருகிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியும், புகழும் அனைத்து மொழிகளிலும் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்தின் வசூலைக் கடந்து விடும் என பலரையும் நம்ப வைத்துள்ளது.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியானது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி
அடுத்த கட்டுரைஆர் யூ ஓகே பேபி? தமிழ் திரைப்பட விமர்சனம்