முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

பிரேக் அப் என்று அழைக்கப்படும் காதல் முறிவு என்றாலே சோகப்பாடல் தான் என்பதை மாற்றி அமைக்கும் முயற்சியாக எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ உருவாகி உள்ளது.

முகேன் ராவ், தேஜு அஷ்வினி முன்னணி பாத்திரங்களாக தோன்றும் இந்த பாடலில் இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

அஷ்வின் மற்றும் லாஸ்லியா நடிப்பில் பலரது இதயங்களை வென்ற ‘பேபி நீ சுகர்’ ஆல்பத்தின் வெற்றிக்கு பிறகு எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் மகேஷ் ராம் கே ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மகத் நடித்த ‘இவன் தான் உத்தமன்’ திரைப்படத்தையும் மகேஷ் ராம் கே இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்திற்காக மிகவும் திறமை வாய்ந்த குழுவினருடன் மகேஷ் ராம் கே கைகோர்த்துள்ளார். பாடல் வரிகளை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, தரண் குமார் இசை அமைக்க, ‘கோப்ரா’ படத்தின் ஒளிப்பதிவாளரான ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவை கையாள, ஆர் சி பிரணவ் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார்.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ பாடலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் மகேஷ் ராம் கே, “பிரேக் அப் என்றால் மனம் உடைய தேவையில்லை என்பதையும், அதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கலகலப்பாக சொல்லும் ஆல்பமாக ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ உருவாகி உள்ளது. காதல் ஆல்பத்தில் பொதுவாக நாயகன், நாயகி மட்டும் தான் இடம் பெறுவார்கள். ஆனால் இதில் முகேன் ராவ், தேஜு அஷ்வினி தவிர இமான் அண்ணாச்சி, தீபா மற்றும் பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோருக்கும் முக்கிய இடமுண்டு. தயாரிப்பில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை போன்று ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ அமைந்துள்ளது. மார்ச் 21 அன்று சோனி மியூசிக்கில் வெளியாக உள்ள ஆல்பத்தை அனைவரும் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ ஆல்பத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக ரூபிணி எஸ் பங்களித்துள்ளார். கான்செப்ட் மற்றும் நடன இயக்கத்தை சதீஷ் கிருஷ்ணன் கையாள, கலை இயக்கதிற்கு கார்த்திக்கும், ஆடை வடிவமைப்புக்கு பூர்த்தி பிரவீனும் பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

எஸ் ஜி சி மீடியா & என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், தரண் குமார் இசையில் முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பமாக உருவாகி உள்ள ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’ மார்ச் 21 அன்று சோனி மியூசிக்கில் வெளியாகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here