சொர்கவாசல் கதை
1999-ல் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த சொர்க்கவாசல்.
கதையின்நாயகன் பார்த்திபன் ரோட்டோரத்தில் ஒரு உணவு கடை வைத்திருக்கிறார். இவரின் அம்மாவுக்கு யானை கால் நோய்இருக்கிறது. இவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். ரோட்டோரத்தில் உள்ள உணவு கடையை ஹோட்டலாக மாற்றவேண்டும் என ஆசை படுகிறார், இதற்காக ஒருவரிடம் லோன் கேட்டிருப்பார். இப்படி சென்றுகொண்டிருக்கும்போது செய்யாத கொலைக்கு சென்ட்ரல் ஜெயிலுக்கு செல்கிறான் பார்த்திபன்.
Read Also: Mayan Tamil Movie Review
தான் ஜெயிலுக்குள் வந்ததற்கு காரணம் ஜெயிலை ஆண்டுகொண்டிருக்கும் சிகா என்பவன்தான் என தெரியவருகிறது. பிறகு ஜெயிலில் இவனுக்கு பல பிரச்னைகள் வருகிறது. அனைத்தையும் சமாளித்து வெளியே வந்தாரா? இல்லையா?, தான் ஆசைப்பட்டபடி ஹோட்டல் தொடங்கினாரா? காதலியை கரம்பிடித்தாரா? அம்மாவின் யானை கால் நோயை சரிசெய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஷ்வநாத் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡வசனங்கள்
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡சிறப்பான சிறை காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மெல்லநகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
➡சுற்றிவளைக்கும் திரைக்கதை
ரேட்டிங்: ( 3 / 5 )