கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்தன என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
சுல்தான் திரைப்படத்தின் டீசர் வரும் திங்கட்கிழமை அதாவது பிப்வரி 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கார்த்தி ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது































