சூர்யாஸ் சாட்டர்டே கதை
கதையின் நாயகன் சூர்யா சிறுவயதில் அதிக கோவக்காரனாக இருக்கிறான். எதற்கெடுத்தாலும் அடி தடி என்று இருக்கிறான், இவனாலேயே குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. இந்த சூழ்நிலையில் நாயகனின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது, வாழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் சமயத்தில் சூர்யாவை கூப்பிட்டு நீ எதற்கெடுத்தாலும் கோபப்படுவதால் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். நீ உன் மொத்த கோபத்தையும் நோட்டில் எழுதி வை வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமை அன்று அதனை பார், அப்போது நீ அந்த பிரச்சனைக்கு சண்டை போடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்து என்ன வேண்டுமானாலும் செய் என்கிறார்.
Read Also: Sembian Madhevi Tamil Movie Review
கதையின் நாயகன் வளர்ந்து பெரியவனாகிறான், தன் அம்மா சிறுவயதில் சொன்னதுபோலவே ஒரு வாரத்தில் இருக்கும் மொத்த கோபத்தையும் சனிக்கிழமை அன்று மட்டும் தான் வெளிப்படுத்துகிறான். இப்படி இருக்கையில் நாயகனின் ஏரியாவுக்கு புதிதாக வருகிறார் போலீஸ் தயா, தாயாவின் செயல்களால் நாயகனுக்கு கோபம் எழுகிறது, கடைசியில் நாயகன் தயாவை எதிர்த்தாரா? இல்லையா? இவர்களுக்குள் என்னதான் ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் விவேக் ஆத்ரேயா சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡SJ சூர்யா& நானி நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுத்த விதம்
➡தமிழ் டப்பிங்
➡இடைவேளை காட்சி
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (3 / 5)