சூழல் கதை
இந்த சுழல் 2, சுழல் 1 எங்கு முடிந்ததோ அங்கிருந்து தொடர்கிறது.
நந்தினி சித்தப்பாவை கொலை செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருக்கிறார். அவரின் நண்பரும் காவல் அதிகாரியுமான சர்க்கரை, செல்லப்பா என்கிற வக்கீல் மூலம் நந்தினியை வெளியே கொண்டுவருவதற்கான வேலையை செய்துகொண்டிருக்கிறார்.வக்கீல் செல்லப்பாவின் நண்பனின் மகன் தான் சர்க்கரை, அதனால்தான் சர்க்கரைக்கு செல்லப்பா உதவி செய்கிறார்.
Read Also: Dragon Tamil Movie Review
செல்லப்பா ஒரு நேர்மையான மனிதர், ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் இவரைத்தான் தேடி வருவார்கள். ஊரில் திருவிழாவிற்காக கொடி ஏற்றும் சமயத்தில் ஒரு பிரச்சனை உண்டாகிறது, அன்று இரவு செல்லப்பா தனது தனி விடுதியில் இருக்கும்போது மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். இந்த கேசும் சர்கரையிடமே வருகிறது. கொலைக்கான பின்னணியை பற்றி விசாரிக்கும்போது, 8 பெண்கள் தாங்கள்தான் கொலைசெய்ததாக சரணடைகிறார்கள், இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே தொடரின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி எழுத, இயக்குனர்கள் பிரம்மா & சர்ஜுன் பரபரப்பாக இயக்கியுள்ளார்கள்.
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த சுழல் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡தொடர் உருவாக்கப்பட்ட விதம்
➡பின்னணி இசை
➡வசனங்கள்
➡படத்தொகுப்பு
➡ஒளிப்பதிவு
கடுப்பானவை
➡தொடரின் வேகத்தை குறைக்கும் ஒருசில எபிசோடுகள்
ரேட்டிங்: ( 3.5 / 5 )