Netflix பண்டிகை: Netflix-ன் 2023 தமிழ் திரைப்பட அறிவிப்புகள்

Netflix-ல என்ன Special? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடம் உரிமம் உள்ள படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம். தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால்…

Read More

டிரைவர் ஜமுனா தமிழ் திரைப்பட விமர்சனம்

டிரைவர் ஜமுனா கதை கூலிப்படையை சேர்ந்த மூன்று நபர்கள் ஒரு அரசில்வாதியை கொள்ள சென்றுகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது , அப்போது இவர்கள் ஆன்லைனில் கார் ஒன்றை புக் செய்கின்றனர், அந்த புக்கிங்கை ஜமுனா எடுக்கிறார் , இவர்களை அழைத்து செல்ல அந்த இடத்திற்கு வந்து இவர்களை பார்த்ததும், ஜமுனாவிற்கு ஏதோ தவறாக தெரிகிறது அதனால் ஜமுனா அங்கிருந்து செல்ல முடிவெடுக்கிறார். அப்போது அந்த மூவரில் ஒருவர் ஜமுனாவிடம் ஒருசில பொய்களை சொல்லி, ஜமுனாவின்…

Read More

“ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்” படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்த படம் ‘ஃபர்ஹானா’

அனைவரும் உணரக்கூடிய, புரியக்கூடிய எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடிய வகையில் இக்கதை அமைந்துள்ளது. சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஐஸ்ஹவுஸ்தான் இந்தப் படத்திற்கான பின்புலம். மிகவும் பரபரப்பாக இருக்கின்ற பகுதி. சின்னச்சின்ன சந்துகளுக்கு நடுவில் அவ்வளவு உயிரோட்டமான வாழ்க்கை இருக்கிறது. இங்கேயும், பாரிமுனையிலும் தான் இப்படிப்பட்ட வைப்ரேஷனை அதிகம் உணர முடியும். இங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கை நெரிசலில் இருந்தாலும், எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும், நகரம் பெருசாக விரிந்தாலும் கூட்ட நெரிசலாக வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. இங்கு தான்…

Read More

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது. ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’…

Read More

‘சொப்பன சுந்தரி’ ஆக தோன்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய…

Read More

கணிக்க முடியாத கிளைமாக்ஸ் “சூழல்”-தி வோர்டெக்ஸ்

‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்‘ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும்…

Read More

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் சுழலும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’pushkar gayathri தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர். இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட…

Read More

பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘

அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர். இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’. இந்த தொடர் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாவதால், தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடருக்கான…

Read More

‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும்…

Read More