ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா…

Read More

93 வயதில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன்…

Read More

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.  பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது….

Read More

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் சூரி-அன்னா பென் நடிக்கும் ‘கொட்டுக்காளி’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான தனித்துவமான கதைகள் மற்றும் சிறந்த படமாக்கலுக்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது,…

Read More

இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” வீடியோ

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். “யார் இந்த…

Read More

‘தக்ஸ்’ திரைப்பட டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்

இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக தக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான்,…

Read More

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘பி. டி. சார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும்…

Read More

பியார் பிரேமா காதல் தெலுங்கு ரீமேக்கிற்கு இசையமைத்துள்ள அச்சு ராஜாமணி

தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பியும் தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கோலிசோடா-2 கொலையுதிர் காலம் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த…

Read More

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும்…

Read More