அழகி பாதித்தது போல் இன்னும் எந்த கதையும் என்னை பாதிக்க வில்லை என்றார், தயாரிப்பாளர் உதயகுமார்

2002 பொங்கல் அன்று பல பெரிய படங்களோடு சுமார் 8படங்களுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் தங்கர் பச்சானின் அழகி. மக்கள் மனதை வருடி கொள்ளை கொண்ட படம். 1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தது. ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து…

Read More

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்.

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். இதன் படபிடிப்பு முடிவடைந்தது. நீண்ட நாட்களுக்கு பின் எடிட்டர் பி.லெலின் எடிட்டிங்கில் இதன் எடிட்டிங் வேலைகளும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் தொடர்து நடந்து வருகிறது. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக்…

Read More

“கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பு நிறைவடைந்தது

திரைப்படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படமாக்குகிறேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி முடிப்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. மக்களிடத்தில் பேருபெற்ற பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரைக்கொண்டு நேற்றோடு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. மனதுக்கு நிறைவான படைப்பை உருவாக்கத்தான் இத்தகைய போராட்டம் என எண்ணுகையில் சோர்வும் அயர்ச்சியும்…

Read More

கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை வேடிக்கை பார்க்கலாமா?

எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே மீன் பிடித்து விளையாடினோம் என்பதை நம்புவீர்களா? ஆர்டீஷியன் ஊற்றுப்பகுதியாக வெறும் எட்டு அடிகளில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது எண்ணூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை வெட்டி உற்பத்தி செய்த கரும்புகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறோம் என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டிலேயே அதிக மூச்சுக் கோளாறு நோயினால் பாதிப்புக்குள்ளாகுபவர்களும், உயிரிழப்பவர்களும் நெய்வேலியைச் சுற்றியுள்ள…

Read More

15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” ! சத்யராஜை பெருமைப் படுத்திய படம்!!

எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர். சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும்…

Read More