நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள ‘கரவாலி’ படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் ‘கரவாலி’ படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் – முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. ‘இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ‘ என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், ‘இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்’ என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது.

‘கரவாலி’ என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும் தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது.

பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில் யக்ஷகானா – கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது. இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது ‘டைனமிக் பிரின்ஸ்’ ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

நடிகர்கள்
‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா, மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ்
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் – ஷிதில் ஜி. பூஜாரி – சதீஷ்குமார் ராஜி – பிரசன்னா குமார்- மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன்
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல்
கலை இயக்குநர் : குணா
மக்கள் தொடர்பு : யுவராஜ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை35 சின்ன விஷயம் இல்ல தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘துணிந்தவன்’