தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது.

தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு
உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது.

வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

வட இந்திய ஊடகங்கள்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.இரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரசாந்த் வர்மாவுடன் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா அறிமுகாமகும், பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
அடுத்த கட்டுரைசிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்