தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்குகிறார். அவரது வழிகாட்டல்களுடன், மிக அழகான கிராமத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில், முதன்மை நடிகர்கள் பங்கேற்க, துறைமுகம் மற்றும் கிராமத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டப் படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டில்களில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி கிராமிய அவதாரங்களில் தோற்றமளிக்கின்றனர். ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விரைவில் இன்னும் சில அற்புதமான அப்டேட்கள் வரவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சமீபத்தில் தண்டேல் படத்தின் சாரத்தை, ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர். ரசிகர்களிடையே இவ்வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்திற்காக நாக சைதன்யா முழுமையாக உருமாறியுள்ளார். இதுவரையிலும் நடித்திராத கிராமிய அவதாரத்தில் இப்படத்தில் தோன்றிகிறார். மேலும் அவர் ஸ்ரீகாகுளம் ஸ்லாங்கில் வசனங்களை பேசுவதையும் காணலாம்.

இப்படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : சந்து மொண்டேட்டி
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாசு
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகள் பெற்ற இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
அடுத்த கட்டுரைமங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் கயல் ஆனந்தி !!