“உஸ்தாத் பகத் சிங்” படத்தின் பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒரு அதிரடியான போஸ்டரை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.

பவன் கல்யாண் இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், படத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு, விழாவுடன் இனிதே துவங்கியது. இந்த விழாவில், தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரில் பவன் கல்யாண் அவருக்கே உரித்தான ஸ்டைலுடன் கலக்கலாக காக்கி உடையில் மிளிர்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆனந்த் சாய் மற்றும் குழுவினர் இந்த ஷெட்யூலுக்காக பிரமாண்டமான செட்டை அமைத்துள்ளனர்.

வெகுஜனங்களின் ரசனைக்கேற்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்து வரும் ஹரிஷ் ஷங்கர், மீண்டும் மக்களை பெரிதும் மகிழ்விக்கும் ஒரு பிரமாண்ட புராஜக்டை இயக்கவுள்ளார். இப்படத்தில் இதுவரை பார்த்திராத மாஸ் அவதாரத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி அவதாரத்தில் பவன் கல்யாணை காட்சிப்படுத்தவுள்ளார்.

முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார். தொழில்நுட்பக் குழுவினரைப் பொறுத்தவரை, அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எடிட்டிங் சோட்டா K பிரசாத் செய்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் டைரக்டர்களான ராம்-லக்ஷ்மண் மேற்பார்வையிடுகிறார்கள்.

நடிகர்கள்: பவன் கல்யாண், ஸ்ரீலீலா, அசுதோஷ் ராணா, நவாப் ஷா, கேஜிஎஃப் புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா ஸ்ரீனு, நாகா மகேஷ், மற்றும் டெம்பர் வம்சி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் – ஹரிஷ் ஷங்கர் S தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y.ரவி சங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
திரைக்கதை: K தசரத்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : அயனங்கா போஸ்
எடிட்டர்: சோட்டா K பிரசாத்
கூடுதல் எழுத்தாளர்: சி.சந்திரமோகன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஆனந்த் சாய் சண்டைகள்: ராம் – லக்ஷ்மன்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சந்திர சேகர் ரவிபதி, ஹரிஷ் பாய்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here