தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் கதை
கதையின் நாயகன் காந்தி, தீவிரவாதத்தை ஒழிக்கும் ரகசிய அமைப்பில் இருக்கிறார். இவர்களின் குழு பெயர் சாட்ஸ், தீவிரவாத குழுவின் தலைவரான ராஜீவ் மேனனை பிடிப்பதே இந்த குழுவின் குறிக்கோளாக இருக்கிறது. காந்தி இந்த குழுவில் இருப்பதே அவரின் குடும்பத்திற்கு தெரியாது.
ஒருநாள் காந்தி குடும்ப சுற்றுலாவுக்காக தாய்லாந்து செல்கிறார். சென்ற இடத்தில் வில்லன் கும்பலால் இவரின் மகன் ஜீவன் கடத்தி கொலை செய்யப்படுகிறார். இதனை அறிந்த காந்தியின் மனைவி காந்தியை பிரிந்து செல்கிறார். தன் வேலையால் தான் மகனை இழந்தோம் என்ற வருத்தத்தில் காந்தி வேலையை விட்டுவிடுகிறார். பல வருடம் கழித்து காந்தி இந்த வேலைக்கு மீண்டும் வர வேண்டும் என்ற சூழ்நிலை வருகிறது . இவர் எதற்காக வந்தார் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வெங்கட் பிரபு மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡தளபதி நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡யுவனின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡De- Ageing
➡சிறப்பு தோற்றங்கள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: (3 / 5)