‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகிறது!

புஷ்பா ராஜின் மேஜிக்கை மீண்டும் திரையில் காணத் தயாராகுங்கள்! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஏப்ரல் 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், “ஹனுமான்” திரைப்படம் !!
அடுத்த கட்டுரைசன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!