மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படங்கள் விமர்சகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், “கணவன் – மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம். அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். ‘WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘டாணாக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!
அடுத்த கட்டுரை‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- இயக்குநர் சுகுமார் கூட்டணியில் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு