திரு. மாணிக்கம் கதை
கதையின் நாயகன் மாணிக்கம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர், இவர் தன் அழகான குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இவர் குமுளி பேருந்து நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்கும் வேலை செய்கிறார். குடும்ப பிரச்சனையின் காரணமாக பாரதி ராஜா லாட்டரி டிக்கெட் வாங்க ஆசைபடுகிறார். ஆனால் அந்த டிக்கெட் வாங்க கூட அவரிடம் பணம் இல்லை அதனால் அவருக்கான டிக்கெட்டை எடுத்துவைத்துவிட்டு மறுநாள் வாங்கிக்கொள்ள சொல்கிறார் மாணிக்கம்.
Read Also: Max Tamil Movie Review
மறுநாள் மாணிக்கம் எடுத்துவைத்த டிக்கெட்டில் ஒன்றரை கோடி ரூபாய் பரிசு அடிக்கிறது. அப்போது மாணிக்கத்தின் மனைவி நம்குடும்பத்தில் பல பிரச்னைகள் இருக்கிறது, அதனால் அந்த டிக்கெட்டை நாமே வைத்துக்கொள்ளலாம் என்கிறார். ஆனால் மாணிக்கம் யாரென்றே தெரியாதவரை கண்டுபிடித்து அந்த டிக்கெட்டை கொடுக்க நினைக்கிறார், கடைசியில் அந்த லாட்டரி டிக்கெட்டை, பாரதிராஜாவை கண்டுபிடித்து கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் நந்தா பெரியசாமி எதார்த்தமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡வசனம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )