துடிக்கும் கரங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

துடிக்கும் கரங்கள் கதை

காவல் துறை அதிகாரியான IG தேவராஜின் மகள், கடற்கரை ஓரமாக அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த IG தேவராஜ் இந்த கொலைக்கு பின்னணி என்ன? யார் காரணம்? என தேட ஆரம்பிக்கிறார். அதேபோல் அவரின் நண்பர் சமீர் அவர்களும் திடீரென்று காணாமல் போகிறார். சமீரின் அப்பா ஊரிலிருந்து வந்து சமீரை தேடிக்கொண்டிருக்கிறார்.

Read Also: Angaaragan Tamil Movie Review

கதையின் நாயகன் விமல் கொத்து பரோட்டா என்ற யூடுயூப் சேனலை வைத்திருக்கிறார், அதில் அன்றாட வாழ்வில் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பதிவிடுவார். சமீரின் அப்பா விமலை எதார்த்தமாக சந்திக்கிறார், அவரின் பிரச்சனைகளையும் கூறுகிறார். அதனை ஒரு வீடியோவாக விமல் தனது யூடுயூப் சேனலில் பதிவிட, வீடியோ வைரலாகிறது. பிறகு சமீர் இறந்துவிட்டார் என்றும் தெரியவருகிறது, இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதும், இதனை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை & பாடல்
➡ஒளிப்பதிவு
➡சண்டைக்காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡இடைவேளைக்கு பிறகு கணிக்கும்படியான காட்சிகள்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *