ட்ராமா கதை
கார் திருடர்களான மணி மற்றும் ரமேஷ் இருவரும், ஒரு காரை திருடிக்கொண்டு செல்லும்போது போலீசாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது காரை சோதனை செய்யும்போது, காரில் ஒரு சடலத்தை பார்க்கிறார்கள். பிறகு மணி & ரமேஷ் இருவரும் போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள்.
Read Also: Asthram Tamil Movie Review
கதையின் நாயகி கீதாவிற்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறது. குழந்தைக்காக கீதா பல மருத்துவமனைக்கு சென்றுவருகிறார். பல வருடங்கள் கழித்து ஒருவழியாக கீதா கர்பமாகிறார். அப்போது ஒரு ரவுடி கீதாவிடம் சில விஷயங்களை கூறி பணம் பறிக்கிறான்.
ஜீவா என்கிறவன் செல்வி என்ற பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் செல்வி, ஜீவாவுக்கு ஓகே சொல்ல, இருவரும் நெருங்கி பழக செல்வி கர்பமாகிவிடுகிறார். இதனை செல்வி வீட்டில் சொன்னாரா? இல்லையா? என்பதும், அந்த காரில் இருந்த சடலம் யார் என்பதும்?, கீதாவிடம் என்ன சொல்லி மிரட்டி பணம் பறிக்கிறான் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார்.