வான் மூன்று தமிழ் திரைப்பட விமர்சனம்

வான் மூன்று கதை

கதையின் தொடக்கத்தில் தனிப்பட்ட முறையில் காதலில் தோல்வியுற்ற கதையின் நாயகன் சுஜித் மற்றும் கதையின் நாயகி சுவாதி தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி மருத்துவமனையில் சந்திக்கும் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது, அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை…

கதையின் நாயகன் ஜோஷ்வா மற்றும் கதையின் நாயகை ஜோதி இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் ஜோதியின் தந்தை, ஜோஷ்வா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிறகு வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஜோதி, தந்தையின் சம்தத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஜோதிக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் இவர்கள் வாழ்வில் என்ன ஆயிற்று என்பதே மீதி கதை…

கணவன் மனைவியான கதையின் நாயகன் சிவம், மற்றும் கதையின் நாயகி சித்ரா இருவரும் சந்தோசமாக வாழ்ந்துவருகின்றனர். சித்ராவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக 7 லட்சம் பணத்தை திரட்டிக்கொண்டிருக்கிறார் சிவம், கடைசியில் 7 லட்சம் பணத்தை திரட்டி தன் மனைவியின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதி கதை…

மொத்தத்தில் வான் மூன்று, மூன்று விதமான காதலை கொடுத்துள்ளது.

இந்த மூன்று விதமான கதையை இயக்குனர் AMR முருகேஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
டெல்லி கனேஷ் & லீலா தாம்சன் பகுதி
வசனங்கள்
ஒளிப்பதிவு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

ஒருசில படங்களின் சாயல்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *