வடக்குப்பட்டி ராமசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி கதை

கதையின் நாயகன் ராமசாமி சிறுவயதில் பானை வியாபாரம் செய்கிறார், தன் குடும்பம் வறுமை காரணமாக ராமசாமிக்கு கடவுள் மீது வெறுப்பு இருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் கடவுள் நம்பிக்கையே போய் விடுகிறது. அந்த சமயத்தில் அவரின் நிலத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது, அதனை மக்கள் நம்புகிறார்கள். அப்போது ராமசாமிக்கு ஒரு யோசனை வருகிறது. மக்களின் இந்த மூட நம்பிக்கையை பயன்படுத்தி அங்கு கோவில் கட்டுகிறார். அதன் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார்.

Read Also: Marakkuma Nenjam Tamil Movie Review

அப்போது அந்த ஊருக்கு புதிதாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட தாசில்தார் வருகிறார், அப்படி வந்தவர் ராமசாமியிடம் கோவில் கணக்குவழக்குகளை கேட்கிறார். தாசில்தார் இப்படி கேட்பது கோவில் நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள அல்ல, கோவில் சொத்துக்களை சுருட்டுவதற்க்காக. அப்போது ராமசாமி ஒரு திட்டம் போடுகிறார், நாமே இந்த கோவில் சொத்துக்களை சுருட்டிவிடலாம் என்று, அப்போது ராமசாமிக்கும் தாசில்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கோவில் இழுத்து மூடப்படுகிறது, அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡ஒருசில வசனங்கள்
➡படத்தொகுப்பு
➡ சிரிக்கவைக்கும் காமெடிகள்

படத்தில் கடுப்பானவை

➡மெல்லநகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமறக்குமா நெஞ்சம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைடெவில் தமிழ் திரைப்பட விமர்சனம்