வீர தீர சூரன் பகுதி 2 கதை
கதையின் ஆரம்பத்தில் பெண் ஒருவர் தன் கணவனை காணவில்லையென்று, அப்பா மகனான ரவி மற்றும் கண்ணனிடம் பிரச்சனை செய்கிறார், பிறகு அந்த பெண் காணாமல் போகிறார். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் ரவி , மற்றும் கண்ணன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். காவல் அதிகாரி அருணகிரிக்கும், ரவி மற்றும் கண்ணனுக்கும் இடையில் இருக்கும் பழைய பகை காரணமாக இவர்களை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்.
Read Also: The Door Tamil Movie Review
அருணகிரியின் இந்த திட்டத்தை அறிந்த ரவியும், கண்ணனும் இந்த ஒரு இரவு எப்படியாவது தப்பித்தால் காலையில் நீதிமன்றத்தில் சரணடைந்து விடலாம் என முடிவெடுக்கிறார்கள், கடைசியில் அருணகிரிக்கும், ரவி மற்றும் கண்ணன் இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதும் கதையின் நாயகன் காளி இந்த பிரச்சனைக்குள் எப்படி வருகிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் S.U. அருண் குமார் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡விக்ரமின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் எதார்த்த நடிப்பு
➡சிறப்பான இரண்டாம்பாதி
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
➡படத்தின் நீளம்
ரேட்டிங்: ( 3 / 5 )