வீராயி மக்கள் கதை
வீராயி என்ற அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் மருது தான் மூத்த மகன் இவர் தன் தம்பிகள் மற்றும் தங்கையை அப்பா போல் பார்த்துக்கொள்கிறார். அவர்கள் மேல் பாசமாகவும் இருக்கிறார். அனைவரும் வளர்ந்த பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு அனைவரும் பிரிந்துவிடுகின்றனர்.
தன் குடும்பம் எந்த பிரச்சனையின் காரணமாக பிரிந்தது, என அறிந்த கதையின் நாயகனும், மருதுவின் மகனுமான ஐய்யனார். தன் குடும்பத்தை ஒன்று சேர்க்க நினைக்கிறார். கடைசியில் அவர் நினைத்தபடி குடும்பத்தை ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡வேல ராமமூர்த்தி & மாரிமுத்துவின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡பாசத்தை பிழியும் காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡நாம் இதற்குமுன்பு பார்த்த பல குடும்ப படங்களின் சாயல்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (2.75 / 5)