நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இமான் “ மாறும் உறவே” பாடலின் வீடியோவை இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களங்களில் அசத்தும் நடிகர் அசோக் செல்வன், தனது சிறப்பான நடிப்பினால், பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கியமான நட்சத்திரமாக மாறியுள்ளார். தொடர்ந்து நம்பிக்கைக்குரிய நல்ல படைப்புகளை வழங்கி வருவதால், அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘வேழம்’ மீதான எதிர்பார்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளது,

குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்குகிறார், K4 Kreations சார்பில் கேசவன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுவதும் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது, மேலும் இசையமைப்பாளர் D இமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாறும் உறவே’ என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.

படத்தின் தொழில்நுட்ப குழு:
சக்தி அரவிந்த்- ஒளிப்பதிவு, A.K. பிரசாத் – எடிட்டர், சுகுமார் R – கலை இயக்குனர், தினேஷ் சுப்புராயன்- சண்டை பயிற்சி, M.சரவணக்குமார் – சவுண்ட் மிக்ஸிங், சுரேஷ் சந்திரா ரேகா D’ One – மக்கள் தொடர்பு.

SP Cinemas இப்படத்தினை உலகமெங்கிலும் தியேட்டரில் வெளியிடுகின்றனர். படம் ஜூன் 24, 2022 அன்று தியேட்டரில் வெளியாகிறது.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நம்ம விக்ரம்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here