விடாமுயற்சி கதை
கதையின் நாயகன் அர்ஜுன், நாயகி கயல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு 12 வருடங்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கயல், அர்ஜுனிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார்.
கயல் கேட்டபடியே, அர்ஜுன் விவாகரத்து கொடுக்க முடிவெடுக்கிறார். ஒருநாள் கயல் தனது அம்மா வீட்டிற்கு தனியாக செல்ல முடிவிடுகிறார், அப்போது அர்ஜுன் தானே வந்து விடுவதாக சொல்கிறார். அப்படி இவரும் செல்லும்போது, வழியில் ஏற்பட்ட பிரச்னையால் கயல் மர்ம கும்பலால் கடத்தப்படுகிறார், கடைசியில் அர்ஜுன் கயலை மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் மகிழ் திருமேனி சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அஜித் & அர்ஜுன் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் திரைக்கதை
ரேட்டிங்: ( 3 / 5)