விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர்.

எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் முந்தைய படங்களான ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் இப்படமும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்தாளர்-இயக்குனர்: அருண் பிரபு

ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்

இசை: விஜய் ஆண்டனி

எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா

ஆக்ஷன்: ராஜசேகர்

குடும்பம், ஆக்‌ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக நிச்சயம் ‘சக்தி திருமகன்‘ பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும். விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக அவருடைய கேரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையும். தற்சமயம் படம் போஸ்ட் புரடெக்‌ஷனில் உள்ளது. படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைசுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!
அடுத்த கட்டுரை‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்