விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’

ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2’ சிறந்த படமாக வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம் என்பதால், தனது முழு அர்ப்பணிப்பையும் இதில் கொடுத்துள்ளார். மேலும், படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் பேட்ச்-அப் வேலைகள் உள்ளது. புரோமோஷனலாக நிறைய விஷயங்களை தயாரிப்புத் தரப்பு பிரம்மாண்டமாக திட்டமிட்டுள்ள நிலையில், இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு படத்தின் டீசர், டிரெய்லர் வருவதற்கு முன்பாகவே 4 நிமிட sneak peak வெளியிட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘பிச்சைக்காரன்2’ பெற்றுள்ளது. மேலும், கதாநாயகனே இல்லாமல் வெளியாகி இருக்கும் முதல் sneak peak என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், வெளியான இந்த நான்கு நிமிட sneak peak பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு, அவர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

விஜய் ஆண்டனியின் ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2’ படம் ஆரம்பித்ததில் இருந்து அது குறித்தான ஸ்பாட்லைட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. ‘ஆண்டி-பிகிலி’ என்ற புரோமோஷனல் கான்செப்ட்டோடு ஆரம்பித்த இந்தப் படத்தின் அனைத்திந்திய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது. டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஸ்னீக் பீக்கை 4 நிமிடங்களில் வெளியிடும் இந்த புதிய பரிமாண முயற்சி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விவரம்

லைம் புரொட்யூசர்: சாண்ட்ரா ஜான்சன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: நவீன் குமார்,
தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு,
இயக்குநர்: விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயணன்,
இசை: விஜய் ஆண்டனி,
DI கலரிஸ்ட்: கௌஷிக் கே.எஸ்,
படத்தொகுப்பு: விஜய் ஆண்டனி,
அசோசியேட் எடிட்டர்: திவாகர் டென்னிஸ்,
கலை இயக்குநர் : ஆறுசாமி,
ஸ்டைலிஸ்ட்: ஜி அனுஷா மீனாட்சி,
நடன இயக்குநர்கள்: ராஜசேகர், மகேஷ் மேத்யூ,
எழுத்தாளர்கள்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதிறமையின்றி யாரும் ஜெயிக்க முடியாது -செல்வராகவன் பேச்சு
அடுத்த கட்டுரைதன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’