தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழில் 100 கோடி வசூல் செய்த ஒருசில திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அகில இந்திய நடிகராக தற்போது விஜய்சேதுபதி மாறி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘உப்பென்னா’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய் செய்து வில்லனாக நடித்து இருந்தார் என்பதும் கதாநாயகிக்கு தந்தையாக நடித்து இருந்த அவருடைய கேரக்டர் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஸ்டைலிஷ் தமிழச்சி நடிகையின் அடுத்த அவதாரம்!!
அடுத்த கட்டுரை” தீ இவன் ” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்!!