உலகநாயகனின் “விக்ரம்” திரை விமர்சனம்

லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்து ஜூன் 3 வெளியாகியுள்ள படம் தான் விக்ரம்

அப்பா கமல்ஹாசன் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின்குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார்… அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்த கேங் கொல்வதாக காட்டுகின்றனர்.

கமலையும் காளிதாஸையும் கொல்லும் அந்த கேங் யார் என்பதை கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில் வருகிறார். முதல் பாதியில் அவரது விசாரணை காட்சிகள் தான் படத்தை அதிகளவில் கொண்டு செல்கிறது. தனது முட்டைக் கண்களால் அவர் நடித்து மிரட்டும் அழகு அட்டகாசம். அவருக்கு மனைவியாக காயத்ரி நடித்துள்ளார்.

பிக் பாஸ் ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி என மூன்று மனைவிகளுடன் பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தனமாக விஜய்சேதுபதி மிரட்டுகிறார். கஞ்சாவை எடுத்து கடித்த உடன் சக்தி வந்து விஜய்சேதுபதி அடிக்கும் இடங்கள் பக்காவாக செட் ஆகி இருக்கு

மகனை கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக விக்ரம் கமல் போராடுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என நினைக்கும் இடத்தில் இரண்டாம் பாதியில் கதை களத்தை முற்றிலும் மாற்றி விக்ரமுடன் கைதி கதையை மிக சாமர்த்தியமாக இணைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனக ராஜ்

கடைசி 20 நிமிடம் சூர்யா வரும் காட்சி மிக சிறப்பாக உள்ளது மற்றும் நீங்கள் எதிர்பார்காத இன்னும் சில Twist இருக்கு அனைவரும் கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம் இந்த விக்ரம்

சிறப்பானவை
விக்ரம் படம் முழுவதும்

சீரானவை
எதுவும் இல்லை

Rating {4.5/5}

நடிகர்கள் ;

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்,சூர்யா

இயக்குனர் ; லோகேஷ் கனகராஜ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

ஒளிப்பதிவாளர்: கிரீஷ் கங்காதரன்

எடிட்டர்: பிலோமின் ராஜ்

Vikram Movie Review Click Here

Vikram Movie Public Opinion Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *