விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது

தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது.

தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையைல், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்,” என்றார்.

யூபோரியா பிலிக்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது.

‘பெல்லடோனா’ திரைப்படத்தின் இதர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
அடுத்த கட்டுரைநடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்தில் அறிமுகமாகிறார்