விருந்து கதை
மிகப்பெரிய தொழிலதிபரான டேவிட் என்பவர் அவரது சொத்துக்களையும், தொழில்களையும் தன் மகனான ஜான் ஆப்ரகாமிடம் விட்டுவிட்டு ஆன்மீகத்தை தேடி செல்கிறார். ஜான் தொழில் சம்மந்தமாக ஏற்காடு சென்ற இடத்தில் மர்மமான கும்பலால் கொலை செய்யப்படுகிறார். பிறகு தொழிலை எடுத்து மனைவி நடத்துகிறார், இவரும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
Read Also: Quotation Gang Tamil Movie Review
தன் அப்பா, அம்மா இருவரையும் இழந்து நிற்கும் கதையின் நாயகி பெர்லியையும் கொலை செய்ய அதே மர்ம கும்பல் துரத்துகிறது. அப்போது பெர்லியை தேவா காப்பாற்றுகிறார். பெர்லியின் அப்பா, அம்மா இறப்பிற்கு யார் காரணம் என்பதை இவர்கள் இருவரும் தேடி கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும் தேவா பெர்லிக்கு உதவ என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் தாமர கண்ணன் இயக்கியுள்ளார்.
ரேட்டிங்: (2.75 / 5)