Viswasam Second Look Poster

டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த வருஷம் பொங்கலுக்கு வெளி வர இருக்கிற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனைதொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில் விஸ்வாசம் படத்தினுடைய செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஏற்கனவே வெளியாகியிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல இரண்டு அஜித்கள் காட்டப்பட்டது. அதில் ஒருதரான இளமையான அஜித்தான் இந்த செகண்ட் லுக் போஸ்ட்டர்ல இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் தல அஜித் புல்லட்ல் ரெட் கலர் சட்டையிலும், வெள்ளை கலர் வேட்டியில், ரெட் கலர் ஹெல்மெட் போட்டு கொண்டு முகத்தில் புன்னகையுடன் சும்மா திருவிழா கோலத்தோடு ஆரவாரத்தோடு புல்லட்டை கைவிட்டு ஓட்டுகிற ஸ்டைலில் வந்து, இதோ நான் பொங்கலுக்கு வந்துவிட்டேன் என்று சொல்லாம சொல்லியிருக்கிறார் தல அஜித்.
இதுபோக செகண்ட் லுக் திருவிழா கோலத்தோடு வந்திருப்பதால், ஒருவேளை விஸ்வாசம் படத்தினுடைய ஓப்பனிங் பாடலா கூட இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லவேண்டும். இதுபோக தல அஜித்துக்கு பின்புறம் நிறைய பேர் கையில் துண்டு வைத்து சுத்திட்டு வரமாதிரியும் இருக்கிறது.
பர்ஸ்ட் லுக்கில் பார்த்த மாதிரியை செகண்ட் லுக் போஸ்ட்டரின் பின்புறமும் கலர் கலராக கொடிகள் கட்டியிருக்கிறது. முக்கியமாக பொங்கலுக்கு “விஸ்வாசம்” படம் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்துகிற விதமா “பொங்கல் பானை” வைத்து பொங்கல் 2019ன்னு தெரிவித்திருக்கிறார்கள்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைAdanga Maru Movie Stills
அடுத்த கட்டுரைவிக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி