ஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒயிட் ரோஸ் கதை

கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன், ஒரு பெண்ணை கொலைசெய்து பொதுவெளியில் வீசுகிறான். இந்த செய்தியினால் சென்னை பரபரப்புக்குள்ளாகிறது. கதையின் நாயகி, தன் கணவர் குழந்தை இவர்களுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒருநாள் நாயகியின் பிறந்தநாளுக்கு வெளியில் சென்று வரும்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், நாயகியின் கணவர் எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார், இதனால் சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நாயகியின் வாழக்கை மாறுகிறது.

Read Also: The Family Star Tamil Movie Review

தன் கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் நாயகி, நாட்கள் ஆக ஆக கடன்காரர்கள் தொல்லை தாங்க முடியாமல் ஒரு வேளைக்கு செல்கிறார். அப்போது ஒரு கடன்காரர் மகள் தியாவை கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார், அதே சமயம் நாயகி அந்த சைக்கோவிடம் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் நாயகி தப்பித்து தன் மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கயல் ஆனந்தியின் எதார்த்த நடிப்பு
➡மற்ற அனைவரின் கதைக்கேற்ற நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡கால காலமாக கண்ட சைக்கோ த்ரில்லர் கதைகளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.5 / 5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *