எமகாதகி கதை
கதையின் ஆரம்பத்தில் ஊர் தலைவர் செல்வராஜ், திருவிழாவுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருடைய மகள் லீலாவிற்கு குழந்தை பருவத்திலிருந்தே மூச்சு திணறல் உள்ளது. அதனால் லீலாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் வருகிறது. ஒருநாள் செல்வராஜ் வீட்டில் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் இருக்கும்போது லீலா தடுக்கவருகிறார், செல்வராஜ் லீலாவையும் அடித்துவிட்டு கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு செல்கிறார்.
அப்பா திட்டியதை தாங்கமுடியாத லீலா, மறுநாள் காலையில் தூக்குமாட்டி இறந்துவிடுகிறார். இறுதி சடங்கு எல்லாம் முடிந்ததும், சடலத்தை வீட்டைவிட்டு வெளியே கொண்டுவரும்போது, தடங்கல் ஏற்படுகிறது எவ்வளவு முயற்சித்தும் சடலத்தை வெளியே கொண்டுவரமுடியாமல் போகிறது, இதனை பார்த்த ஊர் மக்கள் ஒருபுறம் இதனை சாமி என்றும், மறுபுறம் பேய் என்றும் கூறுகின்றனர், இதன் பின்னணி என்ன, இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡நாயகி ரூபா-வின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡வசனங்கள்
➡படத்தொகுப்பு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡சிறப்பான முடிவு
படத்தில் கடுப்பானவை
➡பெரிதாக ஒன்றும் இல்லை
ரேட்டிங்: ( 3.5 / 5 )