அனிருத்தை கவர்ந்த மாற்றுத்திறனாளி !!

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்.

 இப்படத்தில், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா சுப்பிரமணியன் மற்றும் கௌரி கிஷன் ஆகியோரும் நட்சத்திர நடிகர்களில் ஒரு பகுதியாக உள்ளனர். இப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டுதல் அறிவிக்கப்பட்டதையடுத்து படத்தைச் சுற்றியுள்ள அனைத்து திட்டங்களும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், இப்டத்தின் டீஸர், ட்ரைலர் என அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, மார்ச் மாதத்திலேயே வெளியான இப்படத்தின் பாடல்கள் மட்டுமே வரமாக கிடைத்துள்ளது. ‘மாஸ்டர்’ மொத்த ஆல்பமும் யூதியூப், டிக்-டாக் என அணைத்து தளங்களிலும் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு பாடல்கள் செம வைரல் ஹிட். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலைப் பற்றி சொல்லவே தேவயில்லை.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மாற்றுத்திறனாளி இசைக் கலைஞர் ஒருவர், முட்டிக்கு மேல் கைகளில் பாதி இல்லாமல், தனது தன்னம்பிக்கையினால் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இசையை வாசித்துள்ளார். விரல்களே இல்லாமல் கீபோர்டு வாசித்தும், ஸ்டிக்கை பிடிக்க கைகளே இல்லாமல் பேட் வாசிப்பதும் அவரது சிறப்பு. இந்த வீடியோவை கிருஷ்ணகிரி மாவட்ட ‘தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்’ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரையும் டேக் செய்திருந்தனர்.

மேலும், அனிருத் இந்த வீடியோவை ரீ-ட்வீட் மற்றும் லைக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகிவர, இணையதள வாசிகள் பலரும் அந்த தன்னம்பிக்கை கொண்ட இளம் கலைஞனைப் பாராட்டிவருகிறனர். திறமைக்கு உடல் முக்கியம் இல்லை என்று நிருபித்துள்ளார் !!

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *