அனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்

நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144தடை உத்தரவு அமலில் இருப்பதால்  வெளியீட்டை ஒத்திவைத்துள்ள  தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை.

சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. மேலும் முன்னணி OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் ஸ்கிரீனிங் உரிமையை ரூ. 26 கோடிக்கு வாங்கிவிட்டதாகவும் கூறப்பட்டுவந்தன.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் Kona Venkat இது குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் நிசப்தம் திரைப்படத்தை ஊடகங்களில் வெளியிடுவதில் ஏராளமான ஊகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. “திரையரங்க வெளியீடே எங்கள் சிறந்த முன்னுரிமை” நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், எங்கள் மாற்று வெளியீடாக OTT இயங்குதளம் இருக்கும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here